தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'வாங்க சிரிக்கலாம்... வயதைக் குறைக்கலாம்'

'வாங்க சிரிக்கலாம்... வயதைக் குறைக்கலாம்'

'வாங்க சிரிக்கலாம்... வயதைக் குறைக்கலாம்'


UPDATED : ஜூலை 23, 2026 10:30 PM

ADDED : ஜூலை 23, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2026 10:30 PM ADDED : ஜூலை 23, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவிநாசி:அவிநாசி நகைச்சுவை மன்றம் சார்பில் வாங்க சிரிக்கலாம்... வயதை குறைக்கலாம் என்ற இரண்டாம் கட்ட நகைச்சுவை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

அவிநாசி மாமரத் தோட்டம் பழனியப்பா பள்ளியின் மகாகவி பாரதியார் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அவிநாசி அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் மாரிமுத்து தலைமை வகித்தார். மனவளக்கலை மன்றப் பொறுப்பாசிரியர்கள் சுப்பிரமணியன், தண்டபாணி ஆகியோர் வரவேற்றனர்.

தமிழர் பண்பாட்டுப் பேரவைத் தலைவர் நடராசன், ராஜலட்சுமி ரூபிங்ஸ் விஷ்ணு, மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டாக்டர் பொன்னுசாமி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் முனைவர் நீலகண்டன் கலந்து கொண்டு, தனது நகைச்சுவை உரையாடலால் அரங்கத்தில் இருந்தவர்களை மகிழ்வித்தார்.

அவிநாசி நகைச்சுவை மன்றத்தின் தலைவர் ராஜ்குமார், செயல் தலைவர் பழனிசாமி, பொருளாளர் ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ரக்சகன் மெய்ஞான மூர்த்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us