/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மங்கலம் சாலையில் மங்கலாகும் பார்வை
/
மங்கலம் சாலையில் மங்கலாகும் பார்வை
ADDED : டிச 27, 2024 11:49 PM

திருப்பூர், ; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ரோடு, கருவம்பாளையம் பகுதியில், குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக ரோட்டோரம் குழி தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
இப்பணி காரணமாக கருவம்பாளையம் பகுதியில் ரோடு முழுவதும் மண் பரவிக்கிடக்கிறது. குழாய் பதிப்பு பணி முடிக்கப்படாமல் உள்ளதால், குழிகள் முழுமையாக மூடப்படாமல் மண் கொட்டி மேலோட்டமாக மூடப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது இந்த இடங்களில் கடுமையான மண் புழுதி கிளம்பி ரோட்டில் பரவுகிறது.
இதனால், அப்பகுதி பெரும்பாலான நேரங்களில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இதனால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குழாய் பதிப்பு பணிகள் விரைந்து முடித்து, ரோடு சீரமைக்க வேண்டும்.

