/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆண்டிபாளையத்தில் மீண்டும் படகு சவாரி
/
ஆண்டிபாளையத்தில் மீண்டும் படகு சவாரி
ADDED : டிச 23, 2024 11:51 PM

திருப்பூர்; ஆண்டிபாளையம் படகு இல்லத்தில், மீட்பு படகு வந்து சேர்ந்த நிலையில், நிறுத்தப்பட்ட படகு சவாரி, மீண்டும் துவங்கியது.
திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிப்பாளையம் குளத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில், 1.30 கோடி ரூபாயில் படகு இல்லம் அமைக்கப்பட்டு, மாவட்ட சுற்றுலா துறை சார்பில் படகு சவாரி துவங்கப்பட்டது. விடுமுறை நாட்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்குள்ள சிறுவர் பூங்காவில் விளையாடுவது, திறந்தவெளி அரங்கில் நின்று குளத்தை ரசிப்பது, படகு சவாரியில் ஈடுபடுவது என, பொழுது போக்குகின்றனர்.
படகு சவாரியில் ஈடுபடும் பயணிகளின் பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிக்கும் வகையில், மீட்பு படகு அவசியம் என்பது, விதி; மீட்பு படகு இல்லாததால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சுற்றுலாத் துறையின் துரித முயற்சியால் மீட்பு படகு வந்து சேர்ந்த நிலையில் மீண்டும் படகு சவாரி துவங்கியது; பொதுமக்கள் ஆர்வமுடன் படகில் சவாரி செய்தனர்.