/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
படகுகளும் வரவில்லை; சவாரியும் துவக்கவில்லை: சுற்றுலா மையத்தில் அவலம்
/
படகுகளும் வரவில்லை; சவாரியும் துவக்கவில்லை: சுற்றுலா மையத்தில் அவலம்
படகுகளும் வரவில்லை; சவாரியும் துவக்கவில்லை: சுற்றுலா மையத்தில் அவலம்
படகுகளும் வரவில்லை; சவாரியும் துவக்கவில்லை: சுற்றுலா மையத்தில் அவலம்
ADDED : ஜூலை 28, 2025 09:10 PM

உடுமலை; திருமூர்த்தி அணையில் படகு சவாரியை மீண்டும் துவக்கும் வகையில், 9 படகுகள் வாங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து, ஏழு மாதமாகியும் படகுகளும் வரவில்லை; சவாரியும் துவங்கவில்லை.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், பஞ்சலிங்க சுவாமி கோவில், ஆர்ப்பரிக்கும் பஞ்சலிங்க அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வர் கோவில், திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.
சுற்றுலா பயணியர் வசதிக்காக, 25 ஆண்டுக்கு முன், தளி பேரூராட்சி சார்பில், மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக, திருமூர்த்தி அணையில் படகு சவாரி செயல்பட்டு வந்தது.
தொடர்ந்து பராமரிப்பது குறித்து கண்டு கொள்ளாததால், 20 ஆண்டுகளாக படகு துறை செயல்படாமல், படகுகள் வீணாகி, சிதிலமடைந்தது.
மீண்டும் திருமூர்த்தி அணையில் படகு சவாரி துவக்க வேண்டும், என சுற்றுலா பயணியர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், மீண்டும் சுற்றுலாத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தளி பேரூராட்சி சார்பில் படகு சவாரி துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்தாண்டு டிச., டெண்டர் விடப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்காக, தளி பேரூராட்சி வாயிலாக, 9 படகுகள், 40 லைப் ஜாக்கெட்டுகள் வாங்கப்படும். இதில், இரண்டு இருக்கைகள் கொண்ட பைபர் பெடல் போட், 3, நான்கு இருக்கைகள் கொண்ட பைபர் பெடல் போட், 2, நான்கு இருக்கைகள் கொண்ட போட் ,4 என மொத்தம் 9 படகுகளும், 40 லைப் ஜாக்கெட்டுகளும் வாங்கவும், 4 லட்சத்து 98 ஆயிரத்து 800 க்கு டெண்டர் கேட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது, என அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை தளி பேரூராட்சிக்கு படகுகள் வரவில்லை; படகு சவாரி திட்டமும் வழக்கம் போல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில்,' படகுகள் வாங்க டெண்டர் போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிதி இல்லாததால், இதுவரை படகுகள் வரவில்லை,' என்றனர்.