ADDED : அக் 16, 2025 11:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை:
திருப்பூர் மாநகராட்சிக்கு தலைமை நீரேற்று நிலையம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, 4-ம் குடிநீர் திட்டம் பவானி ஆற்று நீராதாரம் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது. பருவமழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால், பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் அதிகமாக செல்கிறது.
மழைக்காலமாக இருப்பதாலும், ஆற்றில் வெள்ளநீர் அதிகமாக செல்வதாலும் பாதுகாப்பு நலன்கருதி பொதுமக்கள் குடிநீரினை நன்கு காய்ச்சி பருக வேண்டும்.
மழை காரணமாக 4-ம் குடிநீர் திட்டம் மூலம் பெறப்படும் குடிநீரின் அளவு குறைவதால், குறித்த இடைவெளியில் பகிர்மானத்தில் குடிநீர் வினியோகம் செய்ய இயலாமல் உள்ளது. பொதுமக்கள் குடிநீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.