/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கு காப்பீடு 'சைமா' முடிவுக்கு 'போமா' சங்கம் ஆதரவு
/
உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கு காப்பீடு 'சைமா' முடிவுக்கு 'போமா' சங்கம் ஆதரவு
உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கு காப்பீடு 'சைமா' முடிவுக்கு 'போமா' சங்கம் ஆதரவு
உள்நாட்டு பின்னலாடை வர்த்தகத்துக்கு காப்பீடு 'சைமா' முடிவுக்கு 'போமா' சங்கம் ஆதரவு
ADDED : ஜன 11, 2025 09:01 AM

திருப்பூர் : மத்திய அமைச்சர்களை சந்தித்து, உள்நாட்டு வர்த்தகத்துக்கான காப்பீடு திட்டம் உள்ளிட்ட தொழில் பாதுகாப்பு நடவடிக்கை கோரி முறையிடுவது என, திருப்பூர் 'சைமா' சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநில தலைநகரான, கொல்கத்தாவில் உள்ள பனியன் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பு (போமா) நிர்வாகிகள், திருப்பூர் சைமா நிர்வாகிகளை சந்தித்து, தொழில் வர்த்தக நிலவரங்கள் மற்றும் சவால்களை சமாளிப்பது குறித்து ஆலோசித்தனர். 'போமா' தலைவர் அகர்வாலா மற்றும் நிர்வாகிகளை, 'சைமா' தலைவர் ஈஸ்வரன் வரவேற்றார்.
'சைமா' பொது செயலாளர் கோவிந்தப்பன், துணை தலைவர் பாலசந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இருதரப்பு நிர்வாகிகளும், தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டாக விவாதித்தனர்.
இதுகுறித்து 'சைமா' தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:
ஏற்றுமதி வர்த்தகத்தில், இ.சி.ஜி.சி., (கடன் உத்தரவாத திட்டம்) இருப்பது போல், உள்நாட்டு வணிகத்துக்கும், காப்பீடு திட்டம் வேண்டும்; 'போமா' மற்றும் சைமா சார்பில், இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுக்காத டீலர்களின், ஜி.எஸ்.டி., கணக்கை முடக்கி வைக்க வேண்டும் எனவும் கூட்டாக முடிவு செய்யப்பட்டது.
விரைவில், இரண்டு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் நேரில் சந்தித்து, தொழில் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக கோரிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

