/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உதவிக்கரம் நீட்டிய 'பாஸ் பிஸ்னஸ் பார்ம்'
/
உதவிக்கரம் நீட்டிய 'பாஸ் பிஸ்னஸ் பார்ம்'
ADDED : ஜூலை 13, 2025 12:31 AM

திருப்பூர் : திருப்பூர், கல்லம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகரில் சில நாட்களுக்கு முன் குடியிருப்பில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் தகர கொட்டகை வீடுகள் தரைமட்டமானது. 30 குடும்பங்கள் அனைத்து உடமைகளையும் இழந்து பாதிக்கப்பட்டது.
இதனையறிந்த, 'பாஸ் பிஸ்னஸ் பார்ம்' நிறுவனர் கார்த்திக் பத்மநாபன் தலைமையில், 'டஸ்கி பர்னிச்சர் நிறுவன உரிமையாளர் விக்னேஷ், மண்டல இயக்குநர் விஜய்குமார், திருப்பூர் பாஸ் டாலர் சிட்டி தலைவர் வினோத்குமார் ஆகியோர் தலைமையில் திருப்பூர் டாலர் சிட்டி வணிகர்கள் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து பாதிக்கப்பட்ட, 30 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருள், சமையல் பொருட்களை வழங்கினர்.