/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போர்டு அகற்ற முயற்சி இரு தரப்பினர் திரண்டனர் : வெள்ளியங்காட்டில் பரபரப்பு

ADDED : நவ 02, 2025 03:22 AM
திருப்பூர்: திருப்பூர் வெள்ளியங்காட்டில் த.பெ.தி.க., சார்பில், கரும்பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், கருத்துக்களை எழுதி வருகின்றனர்.
கடந்த, 30ம் தேதி, 'சாதி ஒழிக, சனாதானம் ஒழிக, சமூக நீதி வெல்க' என எழுதப்பட்டிருந்தது. இதற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஹிந்து முன்னணி அமைப்பினரின் போர்டில் 'போலி சாதி ஒழிப்பு ஒழிக, திராவிடம் ஒழிக' என எழுதினர். தொடர்ந்து, இருதரப்பினரும், மாறிமாறி கருத்துக்களை எழுதி வந்தனர். இதையறிந்த அப்பகுதியினர், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
நேற்று காலை திருப்பூர் தெற்கு போலீசார் த.பெ.தி.க., சார்பில் வைக்கப்பட்ட போர்டை அகற்ற வலியுறுத்தினர். போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் திரண்டனர். இரு தரப்பு திரண்ட காரணத்தால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை சமாதானம் செய்த போலீசார், வாசகங்களை அழிக்க வலியுறுத்தினர். ஆனால், இருதரப்பிலும் அழிக்கவில்லை. போர்டு அகற்றுவது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் நாளை, இருதரப்பினரிடமும் பேச்சு நடத்த உள்ளனர்.