/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீலகிரி செல்லும் பஸ்களில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை
/
நீலகிரி செல்லும் பஸ்களில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை
நீலகிரி செல்லும் பஸ்களில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை
நீலகிரி செல்லும் பஸ்களில் தண்ணீர் பாட்டிலுக்கு தடை
ADDED : டிச 20, 2024 03:44 AM
திருப்பூர்; நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு, 15 ஆண்டுகள் முன்பே தடை விதிக்கப்பட்டுள்ளது; ஐந்து லிட்டர் தண்ணீர் பாட்டில் தவிர, பிற தண்ணீர் பாட்டில்களுக்கு தடை தொடர்கிறது.
இருப்பினும், ஊட்டி, கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு அதிகமாகியுள்ளது.
கோவை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னுார் வழியாக ஊட்டி மற்றும் கோத்தகிரிக்கு இயக்கப்படும் பஸ்களில் பணிபுரியும் டிரைவர், நடத்துனர்கள், 'பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரிக்குள் அனுமதி இல்லை. தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை நீங்கள் வைத்திருந்தால், இங்கேயே துாக்கியெறிந்து விடுங்கள் என எடுத்துக்கூற வேண்டும்.
பஸ் ஸ்டாண்டுக்கு பஸ் வரும் போது பயணிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால், அதற்கு அரசு பஸ் டிரைவர், நடத்துனர் தான் பொறுபேற்க வேண்டும்.
டிக்கெட் வழங்கும் போது கட்டாயம் பயணிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்' என போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரிலிருந்து அவிநாசி, மேட்டுப்பாளையம் வழியாக தினமும் ஊட்டிக்கு ஆறு பஸ்களும், கோத்தகிரிக்கு இரண்டு, கூடலுாருக்கு ஒரு பஸ் இயக்கப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.