/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாக்ஸ் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
/
பாக்ஸ் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2024 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுனர் பொதுநல சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ டிரைவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
'பாதுகாப்பு இல்லாத பைக் டாக்ஸியை திருப்பூர் மாநகரில் தடை செய்ய வேண்டும்; கால் டாக்ஸிகள் குறைந்த வாடகைக்கு இயக்குவதால் பயணிகள் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. கால் டாக்ஸியை கட்டுப்படுத்தவேண்டும்' என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தனர்.