/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் செய்திக்கு பாக்ஸ் 'நெசவாளர் பாவடி நிலங்கள் பாதுகாக்க நடவடிக்கை'

ADDED : அக் 05, 2024 04:00 AM

திருமுருகன்பூண்டி, காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் தியாகி திருப்பூர் குமரனின் 121வது பிறந்தநாள் விழா திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது.
விகாஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி தலைமை தாங்கினார். தியாகி திருப்பூர் குமரன் நினைவு அறக்கட்டளை செயலாளர் வேலுச்சாமி ஒருங்கிணைத்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், துணைமேயர் பாலசுப்ரமணியம், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், திருமுருகன் பூண்டி நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
குமரன் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
மேயர் பேசுகையில், ''கைத்தறி நெசவாளர்களின் ஆதாரமான பாவடி நிலங்களை பாதுகாக்கவும் மீட்டெடுக்க தமிழக அரசின் துணையுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.