/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குத்துச்சண்டை போட்டி: தீரம் காட்டிய வீரர்கள்
/
குத்துச்சண்டை போட்டி: தீரம் காட்டிய வீரர்கள்
ADDED : நவ 04, 2025 12:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட மாணவர் குத்துச்சண்டை போட்டி, திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
குறுமைய அளவில் நடந்த போட்டிகளில் முதலிடம் பெற்ற, 151 மாணவர்கள் பங்கேற்றனர். 14, 17 மற்றும், 19 வயது பிரிவுக்கான போட்டிகளை விவேகானந்தா பள்ளி முதல்வர் சின்னையா துவக்கி வைத்தார்.
கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் வரவேற்றார். மாவட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் இளங்கோ, ராஜேந்திரன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். இன்று மாணவியர் பிரிவு குத்துச்சண்டை போட்டி நடக்கிறது.

