/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்த பணி; ஆலோசனை 'மாறிமாறி' கோஷமிட்ட தி.மு.க. - அ.தி.மு.க.வினர் இருப்பது, 1200; பதிவாவது, 650

ADDED : நவ 04, 2025 12:06 AM

திருப்பூர்:  வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, தெற்கு தொகுதி பூத் ஏஜன்ட்கள் பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது. பயிற்சி முடியும் நேரத்தில் அரசியல் கட்சியினர் இரு தரப்பாக கருத்து மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி இன்று துவங்கப்படுகிறது. அதனையொட்டி, திருப்பூர் தெற்கு தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் அனைத்து கட்சியினருடனும், ஓட்டுச் சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி வகுப்பு ஆகியன, டவுன் ஹால் மாநாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் அமித் தலைமை வகித்தார். தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மேகநாதன், உதவி கமிஷனர்கள் பயிற்சி அளித்தனர். 245 ஓட்டுச் சாவடிகளின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஏஜன்ட்கள் பங்கேற்றனர்.
கட்சியினர் கோஷம் பயிற்சி நிறைவடையும் நிலையில், படிவங்களை கட்சி ஏஜன்ட்களிடம் வழங்குவது, பூர்த்தி செய்து பெறும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும். இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக, கம்யூ. கட்சியினர் கூறினர். அதிகாரிகள் விளக்கம் அளித்த போது, 'இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தான் இந்த திருத்தப் பணியே வேண்டாம் என்று எங்கள் கூட்டணி தெரிவித்துள்ளது,' என்று கூறி, பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., கூட்டணியினர் கோஷமிட்டனர். திருத்தப்பணிக்கு ஆதரவாக, அ.தி.மு.க. - பா.ஜ. கூட்டணியினர் கோஷமிட்டனர்.