ADDED : பிப் 03, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் :   காங்கயம், திருப்பூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது.
விழாவுக்கு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவன், கேட்டரிங்வேலைக்கு வந்தார். சாப்பாடு பரிமாறி கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்து பலியானார். காங்கயம் போலீசார் விசாரித்தனர். சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

