/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாப பலி
/
லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாப பலி
ADDED : அக் 03, 2025 10:43 PM
திருப்பூர்:
திருப்பூரில் ரெடிமிக்ஸ் லோடு லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிய ஆறு வயது சிறுவன் பலியானார்.
திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியில் வசிப்பவர் குமார். திருச்சியைச் சேர்ந்தவர். பனியன் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மகன் தர்ணீஷ், 7 இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தர்ணீஷ் நண்பர்களுடன் ரோட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு ஒரு ரெடிமிக்ஸ் லோடு ஏற்றிய லாரி வந்தது. கான்கிரீட் கலவையை இறக்கி விட்டு லாரி அங்கிருந்து கிளம்பிய போது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் லாரியின் பக்கவாட்டு கம்பியைப் பிடித்த படி பயணித்தனர். மற்ற சிறுவர்கள் லாரி வேகம் பிடித்தவுடன் நின்று விட்டனர். சிறிது தொலைவு சென்ற போது தர்ணீஷ் கை நழுவி கீழே விழுந்து, லாரியின் பின்சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தான்.
வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.