/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு வங்கி பணியிடத் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்
/
கூட்டுறவு வங்கி பணியிடத் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்
கூட்டுறவு வங்கி பணியிடத் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்
கூட்டுறவு வங்கி பணியிடத் தேர்வு: நாளை முதல் ஹால் டிக்கெட்
ADDED : அக் 03, 2025 10:44 PM
திருப்பூர்:
திருப்பூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு அறிக்கை:
திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், மத்திய மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் 112 பணியிடங்கள் காலியாக உள்ளன. உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் வாயிலாக நிரப்பப்பட உள்ளது.
கடந்த ஆக. 29ம் தேதி வரை, www.drbtiruppur.net என்கிற இணையதளம் வாயிலாக, ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், தகுதியானவர்களுக்கு வரும் 11ம் தேதி எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.
திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி மற்றும் கே.எஸ்சி., அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வு எழுதுவோர், வரும் 5 ம் தேதி முதல் (நாளை முதல்) www.drbtiruppur.net என்கிற இணையதளத்திலிருந்து ஹால்டிக்கெட் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.