/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி துாய்மைப்பணியாளருக்கு சோதனை அடிப்படையில் காலை உணவு
/
மாநகராட்சி துாய்மைப்பணியாளருக்கு சோதனை அடிப்படையில் காலை உணவு
மாநகராட்சி துாய்மைப்பணியாளருக்கு சோதனை அடிப்படையில் காலை உணவு
மாநகராட்சி துாய்மைப்பணியாளருக்கு சோதனை அடிப்படையில் காலை உணவு
ADDED : ஜன 03, 2026 06:06 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் ஏறத்தாழ மூவாயிரம் துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது. இதில் நான்கு மண்டலங்களுக்கு தனித்தனி பிரிவாக தலா 750 பணியாளர்கள் என்ற வகையில், உணவு தயாரித்து, பேக் செய்து, அவர்கள் பணியாற்றும் வார்டு பகுதிகளுக்கு கொண்டு சென்று வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சோதனை அடிப்படையில் முதல் கட்டமாக பி.என்., ரோடு பகுதியில் ஒரு சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக நேற்று காலை உணவு தயாரிக்கப்பட்டு, வார்டு பகுதிகளுக்கு கொண்டு சென்று பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.