/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குழந்தை உயிர் காக்கும் தாய்ப்பால் தானம்'
/
'குழந்தை உயிர் காக்கும் தாய்ப்பால் தானம்'
ADDED : ஆக 03, 2025 09:57 PM
திருப்பூர்; சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார்முன்னிலை வகித்தார்.
குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபராஜிதா பேசுகையில், ''குழந்தை பிறந் தது முதல் இரண்டு வயதுவரை தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகும். தாய்ப்பால் என்பது எளிதில் செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துள்ள உணவுப்பொருள். தாய்ப் பாலுாட்டுவதன் மூலம் குழந்தைக்கு தேவையான நீர்ச்சத்து, வைட்டமின்கள், பாதுகாப்பு உணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தாயின் உடல் நலமும், குழந்தையின் ஆரோக்கியமும் பேணுவதற்கு தாய்ப்பால் மிகவும் அவசியம்,'' என்றார்.
அறக்கட்டளை அறங்காவலர் பத்மபிரியா பேசுகையில்,''தாய்ப்பால் தானம் வாயிலாக தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் உயிரை காப்பாற்ற முடியும். குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தாய்ப்பாலை உறை குளிர்விப்பான் மூலம் பல நாள் சேமித்து வைக்கலாம். தாய்ப்பால் தானம் செய்வதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் அபாயம் குறை கிறது,'' என்றார்.