ADDED : ஜூன் 12, 2026 03:19 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 3வது மண்டலத்தில் இளநிலை பொறியாளர் சுப்ர மணியம், 52. ரோடு, கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் முருகன் என்பவரிடம் லஞ்சம் பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்கினார்.
ஒப்பந்ததாரர் முருகன், தான் பணி செய்த திட்டங்களுக்கான பில் தொகையை பெற அவரிடம் 8.40 லட்சம் ரூபாய் கேட்டு, அதில், 5 லட்சம் ரூபாயைப் பெறும் போது, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் நடத்திய சோதனையில், 7.75 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சுப்ரமணியம் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்து, மாநகராட்சி கமிஷனர் அமித் உத்தரவிட்டுள்ளார்.
