/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; முன்னாள் சார்-பதிவாளருக்கு சிறை
/
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; முன்னாள் சார்-பதிவாளருக்கு சிறை
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; முன்னாள் சார்-பதிவாளருக்கு சிறை
பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; முன்னாள் சார்-பதிவாளருக்கு சிறை
ADDED : நவ 21, 2024 06:59 AM
திருப்பூர்,; பட்டா பெயர் மாற்றம் செய்ய, பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய முன்னாள் சார்-பதிவாளருக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபியை சேர்ந்தவர் கருப்பசாமி, 55; குடிநீர் வடிகால் வாரிய ஊழியர். இவருக்கு சொந்தமான நிலம், திருப்பூர் மாவட்டம், குன்னத்துார், சுண்டக்காம்பாளையம் மற்றும் கோபியில் இருந்தது.
இவ்விரு நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவும், கிராம ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யவும் கடந்த, 2007 ஜூன் மாதம் குன்னத்துாரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் கருப்பசாமி விண்ணப்பித்தார்.
அதற்காக தடையின்மை சான்று அளிக்க, சார்-பதிவாளர் சந்திரசேகரன், 69 என்பவர், 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். தொடர்ந்து, ஒரு நிலத்துக்காவது பெயர் மாற்றம் செய்ய கருப்பசாமி கேட்டார்.
இதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து, சார்-பதிவாளர் சந்திரசேகரனை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்தது. லஞ்சம் வாங்கி சந்திரசேகரனுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை, 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செல்லதுரை தீர்ப்பளித்தார். அரசு தரப்பில், வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.

