/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆமை வேகத்தில்' பாலம் கட்டும் பணி; வாகன நெரிசலால் மக்களுக்கு சிரமம்
/
'ஆமை வேகத்தில்' பாலம் கட்டும் பணி; வாகன நெரிசலால் மக்களுக்கு சிரமம்
'ஆமை வேகத்தில்' பாலம் கட்டும் பணி; வாகன நெரிசலால் மக்களுக்கு சிரமம்
'ஆமை வேகத்தில்' பாலம் கட்டும் பணி; வாகன நெரிசலால் மக்களுக்கு சிரமம்
ADDED : அக் 23, 2024 06:33 AM

நடராஜா தியேட்டர் நொய்யல் பாலம் அருகே, சிறுபாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில், நடப்பதால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், நொய்யல் ஆற்றின் கரைகள் மேம்படுத்தி, ரோடு அமைக்கும் பணியும், அதே இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு கழிவுநீர் கொண்டு செல்லும் குழாய்களும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இத்திட்டத்தில், நொய்யல் கரையில் வடபுறத்தில் எம்.ஜி.ஆர்., நகர், சாயப்பட்டறை வீதி ஆகியன நடராஜா தியேட்டர் உயர் மட்டப் பாலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்த பாலம் அமைந்துள்ள ரோட்டின் குறுக்கில் கழிவுநீர் செல்லும் கால்வாயும், அதன் மீது சிறுபாலமும் அமைக்கும் பணி கடந்த பல மாதமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
இதனால், பாலம் வழியாகச் செல்லும் வாகனங்கள் மிகவும் குறுகலான இடத்தில் நீண்ட நேரம் நின்று கடந்து செல்லும் நிலை உள்ளது. தீபாவளி பண்டிகை காலமாக உள்ளதால், அதிக வாகனங்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது. சிறுபாலம் கட்டுமானப் பணி கிடப்பில் போட்டுக் கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே சிறுபாலம் கட்டும் பணி விரைந்து செய்து முடிக்க வேண்டும். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்த வேண்டும்.