ADDED : பிப் 04, 2025 07:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், காலேஜ் ரோட்டில், ஆண்டிபாளையம் - சிறுபூலுவபட்டி ரிங் ரோடு, அணைப்பாளையம் பகுதியில் ரயில்வே பாதையைக் கடக்க உயர் மட்டப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன், பாலத்துக்காக கட்டப்பட்டுள்ள துாண்களின் தரம் குறித்து நவீன கருவிகள் வாயிலாக ஆய்வு செய்தார். கோட்ட பொறியாளர் சுஜாதா, உதவி கோட்ட பொறியாளர் கவிதா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

