/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாலங்கள் விரைவில் திறப்பு; போக்குவரத்தில் குழப்பம்
/
பாலங்கள் விரைவில் திறப்பு; போக்குவரத்தில் குழப்பம்
பாலங்கள் விரைவில் திறப்பு; போக்குவரத்தில் குழப்பம்
பாலங்கள் விரைவில் திறப்பு; போக்குவரத்தில் குழப்பம்
ADDED : அக் 19, 2025 10:20 PM

உடுமலை: 'நான்கு வழிச்சாலையில் உடுமலை பகுதியில், நிலுவையிலுள்ள பாலம் கட்டுமான பணிகள் சில மாதங்களில் நிறைவு பெறும்,' என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தினர் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில், உடுமலை பகுதியில், செஞ்சேரிமலை, பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளில் குறுக்கிடும் பகுதிகளில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் மட்டும் நிறைவு பெறாமல் இழுபறியாக உள்ளது.
நான்கு வழிச்சாலையில், போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாலங்கள் கட்டும் பணி இழுபறியாக நடப்பதால், போக்குவரத்தில் குழப்பம் ஏற்படுகிறது. பிற மாநில வாகன ஓட்டுநர்கள் வழித்தடம் தெரியாமல் குழப்பமடைகின்றனர்.
பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், செஞ்சேரிமலை ரோடு குறுக்கிடும் இடத்தில் இருந்து பிரிந்து உடுமலை நகருக்குள் வந்து பழநி நோக்கி செல்கின்றன.
எனவே, பாலம் கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 'உயர்மட்ட பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு திருத்தியமைப்பு உள்ளிட்ட காரணங்களால், பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இரு மாதங்களுக்குள் அனைத்து உயர்மட்ட பாலங்களின் பணிகளும் நிறைவு பெற்று, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்,' என்றனர்.