/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு
/
நிழற்குடை பொலிவானால் பயணிகளுக்கு பாதுகாப்பு
ADDED : டிச 01, 2025 05:49 AM

பல்லடம்: பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையத்தை சுற்றி கிருஷ்ணாபுரம், வதம்பச்சேரி, வடுகபாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து, வேலை, வியாபாரம் என, பல்வேறு பணிகளுக்காக திருப்பூர், பல்லடம், பொள்ளாச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர், தினசரி, காமநாயக்கன்பாளையம் வந்து பஸ் ஏறுகின்றனர்.
பயணிகள் வசதிக்காக, இப்பகுதியில் கட்டப்பட்ட நிழற்குடை, போதிய பராமரிப்புகள் இன்றி, புல் பூண்டுகள் முளைத்தும், துாசி படிந்தும் பாழாகி கிடக்கிறது. நிழற்குடை கைவிடப்பட்டதால், பஸ் ஸ்டாப்பும் நால் ரோட்டுக்கு மாறியது. பஸ்சுக்கு காத்திருக்கும் பொதுமக்கள், மழை, வெயிலுக்கு ஒதுங்க இடம் இன்றி கடைகளில் தஞ்சமடைவதுடன், விபத்து அபாயத்துக்கு இடையே, ரோட்டில் நின்றுதான் பஸ் ஏறுகின்றனர்.
நால் ரோட்டில் வாகனங்கள் தாறுமாறாக வந்து செல்லும் நிலையில், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
நிழற்குடையை முறையாகப் பராமரிக்காததால், பஸ் ஸ்டாப் இடம் மாறியதுடன், பொதுமக்களும் ரோட்டுக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

