/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மரம் வெட்டியதில் தகராறு: அண்ணன் - தம்பி மோதல்
/
மரம் வெட்டியதில் தகராறு: அண்ணன் - தம்பி மோதல்
ADDED : நவ 12, 2025 07:57 AM
சேவூர்: சேவூர் அருகே வடுகபாளையம் மாரியம்மன் தோட்டத்து பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, 85. இவரது மகன்கள் அன்பரசு, 61 மற்றும் முருகவேல் 60. இருவருக்கும் சொந்தமான எட்டு ஏக்கர் பூமி உள்ளது.
பொதுவான எட்டு ஏக்கர் பூமியில் தலா 10 சென்ட் நிலத்தில் இருவரும் வீடு கட்டி வசிக்கின்றனர். இந்நிலையில் முருகவேல் வீட்டின் முன்பு பல ஆண்டுகளாக நன்கு வளர்ந்த மூன்று வேப்பமரங்களை, நேற்று அடியோடு வெட்டி வண்டியில் ஏற்றியுள்ளார். இதனை பார்த்த அன்பரசு பாகம் பிரிக்காத பூமியிலுள்ள மரங்களை எதற்காக வெட்டுகிறாய் என முருகவேலிடம் கேட்டுள்ளார்.
அதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், முருக வேல், அன்பரசை பலமாக தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது. இதனை பார்த்த அன்பரசு மகன் கவுதம், 30, முருகவேல் மகன் அரவிந்த், 30 ஆகியோரும் அடிதடியில் இறங்கினர்.
இதில் நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், சேவூர் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனே சென்ற போலீசார் நான்கு பேரையும் முதலுதவி சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், அன்பரசு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

