/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டரி சங்கத்தின் கொடை: டிராபிக் போலீசாருக்கு குடை
/
ரோட்டரி சங்கத்தின் கொடை: டிராபிக் போலீசாருக்கு குடை
ரோட்டரி சங்கத்தின் கொடை: டிராபிக் போலீசாருக்கு குடை
ரோட்டரி சங்கத்தின் கொடை: டிராபிக் போலீசாருக்கு குடை
ADDED : நவ 12, 2025 07:58 AM

பல்லடம்: வெயில் மலையில் இருந்து தற்காத்துக் கொள்ள, பல்லடம் போக்குவரத்து போலீசாருக்கு குடை வழங்கப்பட்டது.
சுல்தான்பேட்டை வின்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில், பல்லடம் போக்குவரத்து போலீசாருக்கு குடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வரவேற்றார்.
வின்ட் சிட்டி ரோட்டரி சங்க திட்ட இயக்குனர் கனகராஜ், போக்குவரத்து போலீசாருக்கு குடைகளை அன்பளிப்பாக வழங்கினார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீசார், வெய்யில், மழையில் சிரமப்படுகின்றனர்.
போலீசார் சிரமமின்றி வேலை பார்க்க குடை வழங்கப்பட்டது என, கனகராஜ் கூறினார். எஸ்.ஐ. பார்த்திபன் மற்றும் போக்குவரத்து போலீசார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.