/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பில்ட் எக்ஸ்போ-2025' இன்று நிறைவு
/
'பில்ட் எக்ஸ்போ-2025' இன்று நிறைவு
ADDED : ஜூலை 14, 2025 12:42 AM

திருப்பூர்; திருப்பூரில், கட்டட பொறியாளர் சங்கம் சார்பில் நடைபெறும் 'பில்ட் எக்ஸ்போ 2025', கட்டுமானப் பொருள் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.
திருப்பூர் மாவட்ட கட்டட பொறியாளர் சங்கம் சார்பில், கட்டுமானப் பொருள் கண்காட்சி, 'பில்ட் எக்ஸ்போ 2025' கடந்த 11ம் தேதி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் துவங்கியது.
இக்கண்காட்சியை மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். சங்க நிர்வாகிகள், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கண்காட்சியில், 160 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருள் குறித்த அரங்குகளை அமைத்திருந்தன.
இதில், கட்டடங்களுக்குத் தேவையான அனைத்து வித கட்டுமானப் பொருட்கள், கட்டடங்களுக்கும் எக்ஸ்டீரியர் மற்றும் இன்டீரியர் டிசைன்கள்; பர்னிச்சர், எலக்ட்ரிக்கல், டைல்ஸ், மார்பிள்ஸ், அலங்கார பொருள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி இன்று நிறைவுறுகிறது. காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை அரங்குகளை பார்வையிடலாம். அனுமதி இலவசம். கண்காட்சி வளாகத்தில் குழந்தை களுக்கான பிளே ஜோன்; மருத்துவ ஆலோசனை மையங்களும் உள்ளன. கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில், குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது.