ADDED : பிப் 07, 2024 01:32 AM
அ நிறம் | அளவு
பொங்கலுார்:திருப்பூர் கட்டட மேஸ்திரி மீது 'போக்சோ' வழக்கு பாய்ந்தது. அவருக்கு அடைக்கலம் கொடுத்த நண்பரும் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த ராஜதுரை என்பவர் மகன் ராஜகுரு, 42. கட்டட மேற்பார்வையாளராக வேலை பார்த்தார். திருமணமானவர். அவர் அருகிலுள்ள, 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் ராஜகுருவையும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த திருப்பூரை சேர்ந்த சுருளிராஜா, 45 என இருவரையும், 'போக்சோ' சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர்.
