/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குண்டும், குழியுமான கிராம இணைப்பு ரோடு
/
குண்டும், குழியுமான கிராம இணைப்பு ரோடு
ADDED : அக் 28, 2024 12:24 AM
உடுமலை : வாகத்தொழுவு இணைப்பு ரோடு, குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், பல கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
உடுமலை - செஞ்சேரிமலை ரோட்டில் இருந்து மூங்கில்தொழுவு பிரிவு அருகே, பிரிந்து செல்லும் இணைப்பு ரோட்டை, வாகத்தொழுவு, வேலுார் உள்ளிட்ட பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரோட்டிலுள்ள மழை நீர் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால், ரோட்டில் மழை நீர் மற்றும் உப்பாறு அணைக்கு திறக்கப்பட்ட தண்ணீர் சென்று, ரோடு முற்றிலுமாக அரிக்கப்பட்டு, குண்டும், குழியுமாக மாறி விட்டது. இருசக்கர வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது. ரோட்டை உடனடியாக சீரமைப்பதுடன், நிரந்தர தீர்வாக அப்பகுதியில், பாலம் கட்ட சுற்றுப்பகுதி கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.