/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொளுத்தும் வெயில்! முன்னெச்சரிக்கையுடன் இருக்க 'அட்வைஸ்'
/
கொளுத்தும் வெயில்! முன்னெச்சரிக்கையுடன் இருக்க 'அட்வைஸ்'
கொளுத்தும் வெயில்! முன்னெச்சரிக்கையுடன் இருக்க 'அட்வைஸ்'
கொளுத்தும் வெயில்! முன்னெச்சரிக்கையுடன் இருக்க 'அட்வைஸ்'
ADDED : மார் 16, 2024 11:42 PM
திருப்பூர்:'கோடை வெயில் காலங்களில் பரவும் அம்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்,' என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வெயிலின் தாக்கம் கடுமையாகும் போது, உடலின் வெப்ப நிலையும் மாறும். சாதாரண நிலையில் இருந்து வெப்ப நிலை உயரும் போது, காய்ச்சல் தொற்றாக மாற வாய்ப்புள்ளது. தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி மற்றும் சளி, காய்ச்சல் இருந்தால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை, ஆலோசனை பெற வேண்டும். அதிக வியர்வை, சோர்வு, நடுக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
அம்மை ஒரு வகை வைரசால் பரவும் நோய். இது வெயில் காலங்களில் எளிதில் பரவும். இந்த நோய் பொதுவாக சிறுவர், சிறுமியரை அதிகம் தாக்கும். பாதிக்கப்பட்டவரின் உமிழ்நீர், தும்மல் மற்றும் இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த நோய் பிறருக்கும் பரவும்; பயப்பட வேண்டியதில்லை. பத்து நாட்கள் அல்லது இரு வாரங்களில் சரியாகிவிடும். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.
அறிகுறிகள் என்ன?
பொன்னுக்கு வீங்கி: காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ்நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றும். காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, சாப்பிடும் போது உணவை விழுங்கும் போது வலி ஏற்படும்
சின்னம்மை: உடலில் நீர் கட்டிகளை போன்று சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரியதாகி நீர் கோர்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்நோய் குழந்ைதகள், முதியவர்களுக்கு எளிதில் பரவும்.
தட்டம்மை: காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர் வடிதல் அறிகுறிகள். முகம் மற்றும் காதின் பின் பகுதியில் வேர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றும். கண்கள் சிவந்து வீக்கமாக காணப்படும். இரண்டு வாரங்களில் இந்த அம்மை தானாகவே சரியாகிவிடும்.
குடிநீரே அருமருந்து
வெயிலில் இருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள, உடலில் நீர்ச்சத்து குறையாமல் தவிர்க்க, அதிகளவில் நீர் அருந்த வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், பழங்கள், மோர், பழச்சாறு போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். நல்ல காற்றோட்டமான குளிர்ந்த இடங்களில் இருங்கள்.
பருத்தியிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். பாலியஸ்டர், நைலான் ஆடைகளை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது காலணி, குடை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும். காலை, 11:00 முதல் மதியம், 3:30 மணி வரை தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

