/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உக்கடத்துக்கு பஸ் வசதி; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
/
உக்கடத்துக்கு பஸ் வசதி; எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : ஏப் 24, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் அளித்த மனு:
பல்லடம் பகுதியில் வாழும் எண்ணற்ற தொழிலாளர்கள், அரசு தனியார் துறைக்கு செல்லும் ஊழியர்கள் உள்ளிட்டவர்கள், பல்லடம் -- உக்கடம் செல்லும் வழித்தடத்தில் பஸ்கள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பல்லடத்திலிருந்து சின்னியகவுண்டம்பாளையம், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரிச்சல், பாப்பம்பட்டி, செட்டிபாளையம், போத்தனுார், குறிச்சி வழியாக உக்கடம், காந்திபுரம் செல்லும் வகையில், அரசு பஸ்களை இயக்குவதால், பொதுமக்கள் சிரமமின்றி பயனடைவர்.

