/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடம் அரசு பள்ளிக்கு பஸ் இயக்கம்
/
பல்லடம் அரசு பள்ளிக்கு பஸ் இயக்கம்
ADDED : ஜூன் 30, 2025 12:32 AM

பல்லடம்; பல்லடம் அரசு மேல்நிலை பள்ளியில், 1998--99ம் ஆண்டு பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்களின் இரண்டாவது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில், நடந்தது.
கோவை, சென்னை, பெங்களூரு, பல்லடம், திருப்பூர், உடுமலை, மறையூர், மூணார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 120 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:
25 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு முதல் முறையாக சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கினோம். நாங்கள் படித்த அரசு பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நிகழ்ச்சியை நடத்துகிறோம்.
பள்ளியின் தேவையை உணர்ந்து, இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க தீர்மானித்துள்ளோம். நாங்கள் படித்த போது ஏற்பட்ட சிரமங்கள், இனி வரும் தலைமுறை மாணவர்களுக்கு இருக்கக்கூடாது என்பதால், ஆண்டுதோறும் அரசுப் பள்ளிக்கு ஏதாவது ஒரு நல உதவி செய்ய தீர்மானித்துள்ளோம்.
எத்தனையோ ஏழை மாணவர்கள் இதன் மூலம் பயனடைவர். அதுமட்டுமன்றி, அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பஸ் இயக்க திட்டமிட்டுள்ளோம். இரண்டு ஆண்டுக்குள் நிச்சயம் இதை நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னாள் மாணவர்கள், தங்கள் தொழில், வேலை, குடும்ப சூழல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினர். விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, மதிய உணவு, குரூப் போட்டோ ஆகியவற்றுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.