தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/போராட்ட அறிவிப்பு எதிரொலி பள்ளி வழியாக இயங்கிய பஸ்

போராட்ட அறிவிப்பு எதிரொலி பள்ளி வழியாக இயங்கிய பஸ்

போராட்ட அறிவிப்பு எதிரொலி பள்ளி வழியாக இயங்கிய பஸ்


UPDATED : அக் 09, 2026 12:17 AM

ADDED : அக் 09, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:17 AM ADDED : அக் 09, 2026 12:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பல்லடம் அருகே மாணவர்களின் வசதிக்காக இயக்கப்பட்ட அரசு பஸ், பள்ளி வழியாக செல்லாமல் பாதியில் மாணவர்களை இறக்கிவிட்டதால் ஏற்பட்ட பிரச்னை, முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்குப் பிறகு தீர்க்கப்பட்டது.

காட்டூர், சின்னக்காட்டூர், காட்டூர்புதுார், இந்திரா காலனி பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள், 5 கி.மீ. தொலைவில் உள்ள காட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு பஸ் வசதியின்றி சென்று வந்தனர்.

இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் பள்ளி வழியாகவும், இந்திரா காலனி வரையும் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், புதிய பஸ் பள்ளி வழியாக இயக்கப்படாமல் காட்டூர் வரை மட்டுமே சென்று மாணவர்களை இறக்கிவிட்டது. இதனால் மாணவர்கள் அங்கிருந்து 1.5 கி.மீ. நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை திரட்டி இன்று (9-ம் தேதி) முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுத்து, பஸ்சை பள்ளி வழியாக இயக்க ஏற்பாடு செய்தது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us