ADDED : ஜூலை 14, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பெருமாநல்லுார், மலையம்பாளையத்தை சேர்ந்தவர் சிவானந்தம், 23; பனியன் தொழிலாளி. கடந்த, 2021 செப்., 21ம் தேதி தனது நண்பருடன் டூவீலரில் நம்பியூர் - மலையம்பாளையம் ரோட்டில் சென்றபோது அரசு பஸ் மோதியதில் சிவானந்தம் இறந்தார்.
சிவானந்தத்தின் தாயார் சுதா, தனது மகன் இழப்புக்கு விபத்து இழப்பீடு கேட்டு, திருப்பூர் மாவட்ட வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். குடும்பத்தினருக்கு, 24 லட்சத்து 79 ஆயிரத்தை அரசு போக்குவரத்து துறை வழங்க கடந்த, 2024ல் நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், வழங்காததால், சுதா மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி பாலு உத்தரவிட்டார். இதனால், கோவில் வழி பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து, வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.