/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் தேவை
/
பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் தேவை
ADDED : ஆக 28, 2025 11:11 PM
உடுமலை, ; உடுமலை அருகே உள்ள பெதப்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை அருகே உடுமலை - செஞ்சேரிமலை ரோடும், பொள்ளாச்சி - தாராபுரம் ரோடும் சந்திக்கும் இடத்தில் பெதப்பம்பட்டி அமைந்துள்ளது. பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் இங்கு வருகின்றன.
இதனால், இங்கு போக்குவரத்து மிகுந்து காணப்படும். ஆனால், பெதப்பம்பட்டியில் பஸ் ஸ்டாண்ட் இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அங்கு விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அப்பகுதி மக்களும் இக்கோரிக்கை குறித்து மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அங்கு பஸ் ஸ்டாண்ட் அமைக்க குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ணேவ்டும்.