/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'டாஸ்மாக் பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாண்ட் பல்லடத்தில் 'குடிமகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு
/
'டாஸ்மாக் பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாண்ட் பல்லடத்தில் 'குடிமகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு
'டாஸ்மாக் பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாண்ட் பல்லடத்தில் 'குடிமகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு
'டாஸ்மாக் பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாண்ட் பல்லடத்தில் 'குடிமகன்கள் அட்டகாசம் அதிகரிப்பு
ADDED : மார் 07, 2024 03:53 AM

பல்லடம், : குடிமகன்களின் அட்டகாசம் காரணமாக, பல்லடம் பஸ் ஸ்டாண்ட், 'டாஸ்மாக்' பார் போல மாறி வருகிறது.
தொழில், வியாபாரம், கல்வி, மருத்துவம், வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, வெளியூர் செல்லும் பொதுமக்கள், தொழிலாளர்களால், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எந்நேரமும் பரபரப்பாக காணப்படுகிறது.
தினசரி, காலை மற்றும் மாலை நேரங்களில், பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவ மாணவியர், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பெண்கள் என, ஆயிரக்கணக்கானோர் பல்லடம் பஸ் ஸ்டாண்டில் கூடுகின்றனர். இவ்வாறாக மக்கள் நெரிசல் மிகுந்த பஸ் ஸ்டாண்டில், குடிமகன்களை அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலேயே மதுக்கடை 'பார்' உள்ளது. அதில், மது அருந்தும் குடிமகன்கள் பலர், பஸ் ஸ்டாண்டுக்குள் வந்து குடிபோதையில் 'மட்டையாகி' விடுகின்றனர். அரைகுறை ஆடைகளுடனும், வாந்தி எடுத்தபடியும், பஸ் ஸ்டாண்டை 'பார்' ஆக மாற்றி வருகின்றனர்.
பஸ் ஸ்டாண்டு நடைபாதையில் எங்கு பார்த்தாலும், குடிமகன்கள் மட்டையாகி கிடப்பதால், பெண்கள், முகம் சுளிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், குடிமகன்களிலேயே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
இதேபோல், பஸ் ஸ்டாண்டுக்குள், அடிக்கடி குடிமகன்களுக்கு இடையே அடிதடி தகராறுகள் ஏற்பட்டு வருகின்றன பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே போலீஸ் அவுட் போஸ்ட் இருந்தும் பயனில்லை. பெரும்பாலான நேரங்களில் போலீசார் இருப்பதில்லை. அவ்வாறு இருந்தாலும் இது குறித்து கண்டு கொள்வதில்லை என்கின்றனர் பொதுமக்கள்.
எனவே, குடிமகன்களால் ஏற்படும் இன்னல்களில் இருந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க போலீசார் முன்வர வேண்டும்.

