/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மூணாறு ரோட்டில் வளைவில் சிக்கிய பஸ்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
மூணாறு ரோட்டில் வளைவில் சிக்கிய பஸ்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மூணாறு ரோட்டில் வளைவில் சிக்கிய பஸ்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
மூணாறு ரோட்டில் வளைவில் சிக்கிய பஸ்; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 18, 2024 08:21 PM

உடுமலை; உடுமலை - மூணாறு ரோட்டில், 'எஸ்' வளைவில் சுற்றுலா பஸ் சிக்கியதால், மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தமிழக, கேரளா மாநிலங்களை இணைக்கும் பிரதான வழித்தடமாக, உடுமலை - மூணாறு ரோடு அமைந்துள்ளது. முழுவதும் மலைப்பகுதியிலும், அடர்ந்த வனப்பகுதியிலும் அமைந்துள்ள, இந்த ரோட்டில், தமிழக பகுதியில், ரோடு குறுகலாக உள்ளதோடு, இரு புறமும், மழை பெய்து, மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதே போல், 'எஸ்-வளைவு' பகுதியும் குறுகலாக உள்ளதோடு, தடுப்பு சுவர்கள் மற்றும் இரும்பு துாண்கள் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
நேற்று அதிகாலை, உடுமலையிலிருந்து மூணாறு சென்று, சுற்றுலா பஸ், எஸ் - வளைவு பகுதியில் திரும்பும் போது, மலைச்சரிவில் சிக்கியது.
இதனையடுத்து, உள்ளிருந்த பயணிகள் பஸ்சிலிருந்து இறக்கி விடப்பட்டு, மீட்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மலையில் சரியும் நிலையிலிருந்த பஸ் மீட்கப்பட்டது.
இதனால், இந்த ரோட்டில், நேற்று அதிகாலை, 5:45 மணி முதல், 8:45 வரை, மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறமும், பல கி.மீ., துாரத்திற்கு அரசு பஸ், சுற்றுலா மற்றும் சரக்கு வாகனங்கள் காத்திருந்தன.
பொதுமக்கள் கூறியதாவது:
அடர்ந்த வனப்பகுதியில், மலைப்பாதையாக உள்ள இந்த ரோட்டில், இரு புறமும், கீழே இறங்க முடியாத அளவிற்கு, ரோட்டோரத்தில் பெரிய பள்ளம் உள்ளது.
கீழே இறங்கினால், வாகனங்கள் உருண்டு விழும் ஆபத்தான நிலை உள்ளதோடு, எதிரே வாகனங்கள் வந்தால், ஒதுங்க கூட வழியில்லை.
இந்த ரோட்டை, அகலப்படுத்தி, ரோட்டோரங்களில் மண் அமைக்கவும், எஸ்-வளைவு பகுதிகளை மேம்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
எனவே, உடுமலை - மூணாறு ரோட்டை மேம்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.

