/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயங்காத பஸ்... இல்லாத கைப்பிடி
/
இயங்காத பஸ்... இல்லாத கைப்பிடி
ADDED : நவ 24, 2025 06:19 AM

பயணிகள் தவிப்பு
திருப்பூர் - அவிநாசி வழியே இயக்கப்பட்டு வந்த, '9ஏ' பஸ் கடந்த ஒரு மாதமாக குறிப்பிட்ட பகுதியில் இயக்கப்படாமல் உள்ளது. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர். - மனோகரன், கருமாபாளையம்.
விபத்து அபாயம்
திருப்பூர், பல்லடம் ரோடு டி.கே.டி., பங்க் யூடர்ன் பகுதியில் விபத்து அபாயம் ஏற்படும் வகையில், தகரம் நீட்டியுள்ளது. இதை சரி செய்ய வேண்டும். - அஸ்வின், திருப்பூர்.
எப்படி செல்வது?
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வழிகாட்டி விநாயகர் கோவில் பாலம் வழியாக படிக்கட்டு அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு கைப்பிடி கம்பி இல்லாததால் பக்தர்கள் தடுமாறி வருகின்றனர். - சந்திரன், திருப்பூர்.
பல்லாங்குழி சாலை
குமார் நகர் கிழக்கு முதல் வீதியில் ரோடு சிதிலமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. - விஜி, கூட்டுறவு நகர்.
எங்கே இருக்கு?
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளிகள் வாகன நிறுத்தம் இல்லை. இதனால், எங்கு நிறுத்துவது என்று தெரியாமல் சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக அமைக்க வேண்டும். - ராஜேஷ்குமார், அவிநாசி.
வீணாகும் குடிநீர்
திருப்பூர், மங்கலம் ரோடு திருநகர் அருகில் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. - சண்முகம், திருநகர்.
ஒளிராத விளக்கு
பாண்டியன் நகரில் இருந்து மும்மூர்த்தி நகர் வரை ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. பாதசாரிகள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். - கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர்.
நாய்த் தொல்லை
குமரானந்தபுரம், மருதாசலபுரத்தில் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. - திருநாவுக்கரசு, குமரானந்தபுரம்.
குப்பை தேக்கம்
ராயபுரம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே குப்பை அள்ளப்படாமல் தேங்கியுள்ளது. - கார்த்தி, ராயபுரம்.
சும்மா பேருக்கு...
திருப்பூர் மங்கலம் ரோடு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா நகர், 4வது வீதியில் சாக்கடை கால்வாயில் படர்ந்து இருந்த செடிகளை, அரை குறையாக அகற்றிவிட்டு சென்றுள்ளனர். - கார்த்திகா, திருப்பூர்.

