/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயக்கப்படாத பஸ்கள்; மக்கள் சாலை மறியல்
/
இயக்கப்படாத பஸ்கள்; மக்கள் சாலை மறியல்
ADDED : பிப் 04, 2025 07:41 AM

பல்லடம்; பல்லடம், கணபதிபாளையம் ஊராட்சி, நல்லுார்பாளையம் கிராமத்துக்கு சரிவர அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. நேற்று காலை அவ்வழியே வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்லடம் போலீசார், 'உங்களது கோரிக்கை குறித்து அரசு போக்குவரத்து கழகத் தில் பரிந்துரை செய்யப்பட்டு, பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்று கூறியதால், பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
அரை மணி நேரத்துக்கு மேல் அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது
பொதுமக்கள் கூறுகையில், ''தினமும், ஐந்து முறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, நேரம் குறைக்கப்பட்டது மட்டுமன்றி, குறித்த நேரத்துக்கு அரசு பஸ்கள் இயங்குவதில்லை.
தொழிலாளர்கள் வேலைக்கு செல்வது மட்டுமன்றி, மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுாரி செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் பஸ்களை இயக்குவதுடன், கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

