/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு
/
தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 07, 2024 06:57 AM
திருப்பூர்; பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு 2025 மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ளது. இத்தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் வரும், டிச., 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கு அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு (திருப்பூருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்) நேரில் சென்று, விண்ணப்பம் பெற்று, தேர்வு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்வுக்கட்டணம், விண்ணப்பம் பூர்த்தி செய்வது எப்படி என்பன உள்ளிட்ட கூடுதல் விபரங்கள், தேர்வுத்துறை இணையதளத்தில் www.dge.tn.gov.in விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும். ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.