/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிரிக்கெட் அணி தேர்வு வீரர்களுக்கு அழைப்பு
/
கிரிக்கெட் அணி தேர்வு வீரர்களுக்கு அழைப்பு
ADDED : நவ 02, 2025 11:24 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சங்க மேலாளர் வேல்முருகன் அறிக்கை:
அவிநாசி, அணைப்புதுார் அருகிலுள்ளடீ பப்ளிக் பள்ளியில், மாவட்ட கிரிக்கெட்ஆண்கள் அணித்தேர்வு வரும், 13ம் தேதி நடக்கிறது.
செப். 1 - 1985 அன்று அல்லது அதன் பின், பிறந்தவர்கள், ஆக. 31 - 2012 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் இத்தேர்வு போட்டியில் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த, ஆர்வமுள்ள வீரர்கள் தேர்வுக்கு தகுதியுடையவர்கள்.
வரும், 11 ம் தேதி, மாலை 3:00 மணிக்குள், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில், தங்கள் பெயர்களை ஆன்லைனில் (https://www.dcat.in) பதிவு செய்ய வேண்டும். தேர்வுக்காக தங்கள்சொந்த உபகரணங்களை கொண்டு வர வேண்டும்.
தேர்வுக்குப் பிறகு அணியை இறுதி செய்ய, மேம்படுத்த போட்டி மற்றும் பயிற்சிகள் நடக்கும். மேலும் விபரங்களுக்கு, 93442 - 07615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

