/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு திட்டம்; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஆக 14, 2025 08:24 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், நடப்பு 2025 - -2026ம் ஆன்டிற்கான காரீப் பருவத்தில் பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, பிர்கா மற்றும் வருவாய் கிராமங்களில் சாகுபடி செய்யபடும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்திட்டத்தில் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பயிர்காப்பீடு செய்யலாம்.
காப்பீடு பதிவின்போது முன்மொழிவு படிவம், சிட்டா, நடப்பு ஆன்டிற்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல், ஆகியவற்றை வைத்து அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்கவேளான்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து பொது இ- சேவை மையங்களில் பயிர்காப்பீடு கட்டணம் செலுத்தலாம்.
கூடுதல் விபரங்களுக்கு, தங்கள் வட்டார வேளான்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம்.