/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்தியல் கோர்ட்டில் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
/
சுத்தியல் கோர்ட்டில் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
சுத்தியல் கோர்ட்டில் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
சுத்தியல் கோர்ட்டில் காலி பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 06, 2024 03:21 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்பலாம் என்று மாவட்ட கோர்ட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான நீதிபதி குணசேகரன் அறிக்கை:
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் குற்றவியல் வழக்குகளுக்கான இலவச சட்ட உதவி அமைப்பு என்ற பிரிவுக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த வக்கீல்களிடமிருந்து, துணை மற்றும் உதவி குற்றவியல் வழக்கில் பணியிடங்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதேபோல், தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து அலுவலக உதவியாளர் மற்றும் ஆபீஸ் பியூன் ஆகிய பணியிடங்களுக்கும் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பம் மற்றும் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த இதர தகவல்களுக்கு திருப்பூர் மாவட்ட கோர்ட் இணையதளத்தினை https://districts.ecourts.gov.in/tiruppur காணலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.