/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே ஸ்டேஷனில் கேமரா அமைக்கணும்
/
ரயில்வே ஸ்டேஷனில் கேமரா அமைக்கணும்
ADDED : பிப் 12, 2025 11:07 PM
உடுமலை; உடுமலை ரயில்வே ஸ்டேஷனில், இரவு நேரங்களில், சமூக விரோத செயல்களை தடுக்க, கண்காணிப்பு கேமரா அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் - பாலக்காடு அகல ரயில்பாதையில், உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. நாள்தோறும், ஆயிரக்கணக்கான ரயில் பயணியர் இந்த ஸ்டேஷனை பயன்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி இருபுறங்களிலும், சீமை கருவேல மரங்கள் முளைத்து, புதர் மண்டி கிடக்கிறது. மறுபுறத்தில், வேலி மற்றும் சுற்றுச்சுவர் எதுவும் கிடையாது.
எனவே, இரவு, 8:00 மணிக்கு மேல், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில், 'குடி'மகன்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகிறது. அப்பகுதியிலுள்ள பொருட்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது.
மதுபாட்டில்களை, உடைத்துச்செல்வதால், ரயில்வே ஸ்டேஷனுக்கு, வரும் பயணியர் பாதிக்கின்றனர். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, ரயில்வே ஸ்டேஷனில், முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
ரயில்வே போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.