ADDED : பிப் 15, 2025 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; குடிமங்கலம் வட்டாரத்தில், விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள எண் வழங்கும் வகையில், கிராமங்களில், சிறப்பு முகாம் நடந்து வருகிறது.
வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா அறிக்கை: குடிமங்கலம் வட்டாரத்திலுள்ள 24 வருவாய் கிராமங்களிலும், பார்மர்ஸ் ரெஜிஸ்டரி' செயலியில், விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றம் செய்ய சிறப்பு முகாம் நடக்கிறது.
இந்த முகாம் வாயிலாக, விவசாயிகளுக்கு, 21 இலக்கம் கொண்ட அடையாள எண் வழங்கப்படும். வரும் காலங்களில், அரசின் மானியத்திட்டங்களை பெற, இந்த எண் பயனுள்ளதாக இருக்கும். மேலும், விபரங்களுக்கு விவசாயிகள், வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.