/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம்
/
அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம்
அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம்
அத்திக்கடவு திட்ட 2ம் பகுதி பணிகளை துவக்க பிரசாரம்
ADDED : மார் 25, 2025 06:57 AM
திருப்பூர்; பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டம் மற்றும் அத்திக்கடவு - அவிநாசி நீர்செறிவூட்டும் திட்டத்தின் இரண்டாம் பகுதி பணிகளை துவக்க வலியுறுத்தி, அரசின் கவனம் ஈர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்குள் சென்று, வீணாக அரபிக்கடலில் கலக்கும் நீரை, பவானி ஆற்றுக்கு கொண்டு வரும் நோக்கில், பாண்டியாறு - மாயாறு இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
அதோடு, 'அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தில் விடுபட்ட, 1,400க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை திட்டத்தில் இணைக்க வேண்டும்' என்ற கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர்.
இக்கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கிலும், இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், பாண்டியாறு -மாயாறு இணைப்பு திட்ட பூர்வாங்க பாசன சபை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய அனைத்து விவசாய சங்கத்தினரின் ஆதரவுடன், வரும், 30ம் தேதி, நம்பியூரில் துவங்கி, சேவூர் வழியாக அவிநாசி வரை வாகன பிரசாரம் நடத்த திட்டமிட்டு, அதற்கான ஆயத்தக்கட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.