/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
/
புற்றுநோய் தவிர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : நவ 09, 2024 12:34 AM

திருப்பூர் ; திருப்பூர் ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் இன்ட்ராக்ட் கிளப், ரோட்டரி திருப்பூர் மெட்டல் டவுன், கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை இணைந்து, 'ஹீல்' திட்டத்தில், மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த இலவச பரிசோதனை முகாமை நடத்தின.
ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் தலைவர் பழனிசாமி வரவேற்றார். ஏ.வி.பி., கல்விக்குழும தாளாளர் கார்த்திகேயன், பேசினார். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் செயலாளர் ரவிசந்திரன், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், துணை ஆளுனர் சுரேந்தர், முன்னாள் தலைவர் கார்த்திகேயன், ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பிரியாராஜா ஆகியோர் பங்கேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக, 15 வேலம்பாளையம், இன்ஸ்பெக்டர் பிரேமா பங்கேற்று பேசினார். ரோட்டரி கிளப் ஆப் திருப்பூர் மெட்டல் டவுன் ஒப்படைப்பு தலைவர் ஜெயமணி, பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முகாமில், பெண்கள் பலரும் பங்கேற்று பயனடைந்தனர். இன்ட்ராக்ட் கிளப் தலைவர் சோபியா சார்லஸ், நன்றி கூறினார்.