ADDED : மே 02, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், வீரபாண்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கல்லாங்காடு அருகே போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் வகையில் இருவர் நின்று கொண்டிருந்தனர்.
அப்பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஒடிசாவை சேர்ந்த அம்பிகா ஸ்வைன், 42 மற்றும் கிரிஷ், 28 என்பது தெரிந்தது.
போலீசாரின் சோதனையில், விற்பனைக்காக கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிந்தது. இருவரை கைது செய்த போலீசார், இரண்டு கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.