ADDED : செப் 25, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், செப். 26–
நல்லுார் போலீசார், முதலிபாளையம் பிரிவு அருகே நேற்றிரவு சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமான நிலையில் நின்றிருந்த முருகேஷ்குமார், 40 என்பவரிடமிருந்து தடை செய்யயப்பட்ட 300 கிராம் குட்கா பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
* திருப்பூர் வடக்கு போலீசார், ரயில்வே ஸ்டேஷன் அருகே, சந்தேகத்துக்கு இடமான வகையில் கிடந்த பையை சோதனையிட்டனர். அதிலிருந்து, 3.5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
* திருமுருகன்பூண்டி போலீசார், அணைப்புதுார் அருகே சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மணிகண்டன், 40, சத்தியநாதன், 21 ஆகியோரை கைது செய்தனர்; அவர்களிடமிருந்து 180 மில்லி அளவுள்ள 17 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன.
