/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள் மீது கார் - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் புகார்
/
தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள் மீது கார் - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் புகார்
தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள் மீது கார் - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் புகார்
தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள் மீது கார் - ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் புகார்
ADDED : ஜூலை 23, 2025 11:26 PM

அவிநாசி; தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வலியுறுத்தி, அவிநாசி வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.
அவிநாசி - திருப்பூர் ரோடு பைபாஸ் சந்திப்பு பகுதியில், தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர் ஒருவர், ஆன்லைனில் புக்கிங் செய்யாமல், பயணி ஒருவரை சவாரிக்கு அழைத்து செல்ல முயன்றார்.
இதையறிந்த அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் டிரைவர், 'ஆன்லைனில் புக்கிங் செய்யாமல், சவாரி எடுக்கக்கூடாது,' என, வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில், அது கைகலப்பாக மாறியது.
இதையறிந்த தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள், அப்பகுதியில் திரண்டனர். தகவலறிந்து சென்ற அவிநாசி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, கலைந்து போக செய்தனர்.
இப்பிரச்னையை மையப்படுத்தி, நேற்று அவிநாசி வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி., ஆகியோரிடம் அவிநாசி வாடகை ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில், மனு அளிக்கப்பட்டது.
அதில், 'தனியார் நிறுவன டாக்ஸி டிரைவர்கள், ஆன்லைனில் புக்கிங் செய்யாமல், பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்கின்றனர். இதனால், எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே, டாக்ஸி டிரைவர்களுக்கு உரிய கட்டுப் பாடுகளை விதிக்க வேண்டும். ஆட்டோ டிரைவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,' என குறிப்பிட்டுள்ளனர்
மனுவை பெற்று கொண்ட மோட்டார் வாகன ஆய்வாளர் குமரன் மற்றும் டி.எஸ்.பி., சிவகுமார், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அதன்பின், கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

